Showing posts with label அமாவாசை. Show all posts
Showing posts with label அமாவாசை. Show all posts

பதிவர்களின் குசும்பு:::

On Thursday, April 28, 2011 11 comments


நான் படித்த வரை , தெரிந்தவரை பதிவு போடும் போதும் , கருத்து போடும் போதும் நடக்கும் சில விசியங்களை
சொல்கிறேன்....(இது சாதரணமாக  எடுத்து கொள்ள வேண்டும் )

1 .உசுர குடுத்து  ரொம்ப யோச்ச்சு ஒரு பெரிய கவிதைய எழுதி இருப்பார்கள் .
அத முழுசா கூட படுச்சு பார்காம, "NICE ","அருமை ","பிரமாதம் " ,"தொடருங்கள் ""நல்ல எழுத்துகள் " ன்னு உடால் விடறது.....(சும்மா இருதவாவது அவரு வேற வேலைய  பார்ப்பாரு  )

2 .ஒரு நூறு  லைன் எழுதி இருப்பார் நம்ம பதிவர் , அத என்னமோ முழுசா  படுச்ச மாறி ,எங்கையோ  ஒரு ஒரு ரண்டு லைன்'எ
எடுத்து காபி-பேஸ்ட் பண்ணி "என்னை கவர்ந்தது  ன்னு " பீல்டு-அப்  பண்றது ...

3 . எங்கையோ  இருந்து ஒரு பெரிய தகவல, திரட்டி (அ ) சிந்தனைய பெருசா சொல்லி இருப்பாங்க  நம்ம பதிவர் ..., அத நல்ல படுச்சுட்டு
ஒரு கமென்ட் கூட போடாம ஓடிருவாங்க ....(இச்டடுஸ் ல பார்த்த நிறைய   பேர் படுச்சு இருப்பாங்க )


4 .ஆனா பாருங்க வெட்டியா ஒரு பதிவு போட்டு இருப்பாங்க நம்ம பதிவர் , அதுக்கு மாஞ்சு மாஞ்சு  வந்து  ன்னு கமண்டு போடறது ... ..

5 .இது தான் ஹை லைட்டே தொடர் கதைய எழுதும் போது என்னமோ எல்லாத்தையும் படுச்ச மாறி "அடுத்த பதிவு எப்போ ?
அடுத்த பதிவு எப்போ ன்னு " சும்மா இருந்த சங்க நோண்டி கேடுகிறது ..........


6 .தேடி போய் பாலோவர்   மட்டும் , போட்டுட்டு , என்னமோ என்னமோ ஒரு பதிவு விடாம படிக்கிற மாறி
கதை விடுவது ..,..........................    


7 .ஈழ   தமிழ்  படுகொலை (அ) ஏதேனும்  விரும்பதகாத சம்பவங்களை  எழுதி இருப்பார்கள் ..அதுக்கு போய் "LIKES" போடுவது  ....>>>

வெளியிடப்பட்ட நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

On Tuesday, April 26, 2011 4 comments

 இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

-இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

பதிவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட கோபம் .

On 6 comments

வாயில் கொடுத்தார் ரஜினி , ரசிகர்களுக்கு !

On Tuesday, October 26, 2010 5 comments

"அரசியலுக்கு ஆண்டவன் சொன்ன வருவேன் !....


காலத்தின் கையில் அது இருக்கு !............................

எப்போ வருவேன்னு , எப்படி வருவேன்னு யார்க்கும் தெரியாது  !.. வர வேண்டிய  நேரத்துல வருவேன்!

தான் அரசியலுக்கு வரவேண்டும்  என யாரும் கட்டாய படுத்த முடியாது. வர வண்டும் என நினைத்தால் அதை யாரும் தடுக்க முடியாது " ....

இப்படி 15   ஆண்டுக்கு மேல் குழப்பியவர் , கடைசியாக பெரும் எதிர் பார்ப்பில் , ஒரு பெரிய மீட்டிங் ல சொன்ன விசியம் .....



   
 "எந்திரன் படத்துக்கு பிறகு அரசியல் பற்றி முடிவு ".


என கொதிக்கும் ரசிகர்களை பொத்தி வைத்தார் !...  தன் மானத் தலைவர் எப்படியும் எதாவது செய்வர் என ரசிகர்கள் , அமைதி காத்தனர் ... 
தன் இளைய  மகள் திரு மனதிற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் !
விரைவில் பெரிய விருந்து ஏற்பாடு செயாபோகிரேன் , என அப்போதும்  ஆறுதலாக இருந்து விட்டார்  ! பத்தாத குறைக்கு ஜாதகம் வேற !...   




சரி இப்போது படம் வந்து விட்டது !.. இங்க விருந்து ? அரசியல் வாசம் எங்கே ?


இது ரசிகர்களின் ஒட்டு மொத்த  கேள்வி !



இதை பற்றி தீவர ரசிகர்கள் என்ன தான் சொல்கிறார்கள் ?


தலைவர் ஏன் இப்படி பண்றார் நு தெரில !.. ரொம்ப வருசமா காதலுகாக எங்கும் காதலனை போல என்குறோம் !........... 

நேத்து  வந்த பயன் எல்லாம் "உழை திடு உயர்த்திடு " நு கட்சி ஆரம்பிக்கறத இப்பவே காட்டறான்  ..  ஆனா நம்ப ஆளு ?... ரொம்ப கஷ்டம் பா......
  

(இப்படியும் உயிரான ரசிகர் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கணும் )

சொல்லவே கஷ்டமா இருக்கு!.. அவருக்கு உண்மையா வர புடிக்கலை நா , வர மாட்டணு சொலிர்லாமே? ..... இவர் ஊர், காரர் தானே ஜெயலலிதா அம்மா எல்லாம் எப்படி துணிவா சொல்றாங்க ? ..  அவங்க மனசு கருத்துகளை ?.. இவர் மட்டும் ஏன் இப்படி ?



கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கூட தெளிவா அரசில் பற்றி சொல்லிடு ஓரமா ஒதுகிட்டாறு ?.. இவர் தான் ,.....     என புலம்பி தள்ளுகிறார் !




  
தன் தலைவன் என்றாவது அரசியலுக்கு  வருவார் , எம். ஜி. ஆர் ஸ்டைல் லில் உதவுவார்  என இன்னும் வெறித்தனமான ரசிகர்களும் எதிர் பார்க்கும் கடைசி தலைவன் இவர் தான் என்பதில் மாற்றம் இல்லை ....  


இவர் உண்மையில வருவாரா இல்லை, ரசிகர்களுக்கு வெறும் வாயிலே ஆறுதல் கொடுப்பாரா ?.............   அவர் ஸ்டைல் லில் சொன்னால் , ஆண்டவன் தான் (ரஜினி ) சொல்லணும் !   



அய்யா ஒரு நிமிஷம் இங்க வந்திட்டு போங்களேன் !

On Saturday, October 16, 2010 5 comments


இந்த தம்பி அமாவாசை, உங்கள நம்பி ப்ளாக் எழுத வந்து இருக்கேன் !.. என்ன கழுட்டி விட்டுட்டு நீங்க மட்டும் உங்க ப்ளாக் யை famous பன்னதீக !..  ஆயுத பூஜை க்கு பூஜை போட்டு இருப்பிக  !..
உங்களுக்கு ஒரு மேட்டர் !
பாலுறவில் பரவசமடைய :

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய :

முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.